Thursday, December 28, 2006

கனடா அகதியின் அன்பு வேண்டுதல்…

கனடா அகதியின் அன்பு வேண்டுதல்…

அன்பான செஞ்சியாருக்கும், எல்.ஜிக்கும்
ஈழத்தமிழனாகிய நான் கனடாவில் குடியேறி பல வருடங்கள் ஆகினும் தங்களைப் போல் தமிழ் நாட்டில் இருந்து குரல் கொடுத்து வந்த தலைவர்களைப் பார்த்து தான் என் தாயகத்தின் பால் அன்புகொண்டேன். எத்தனையோ ஈழத்தமிழர்கள் வைகோவின் கட்சி கண்; படாமல் கரைசேரவேண்டும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த போது, தங்கள் இருவர்களின் கட்சி தாவல் ஈழத்தமிழர்களாகிய எங்கள் எல்லோரையும் கவலையில் தள்ளியுள்ளது.

தங்களின் தலைமையினை எதிர்த்து நீங்கள் அறிக்கை கொடுத்தது பாரதூரமான குற்றமாகும்;. எங்கள் விருப்பம் எல்லாம் நீங்கள் இருவரும் வைகோவின் காலில் விழுந்து உடனடியாக மன்னிப்புக்கேட்டு, திரும்பவும் கட்சியில் சேரவேண்டும். ஓவ்வொரு முறையும் மதிமுக தோல்வியினை சந்திக்கிறபோது ஈழத்தமிழர்களின் இதயங்களில் இரத்தம் சிந்தும். அவர்கள் தோற்றுவிட்டார்களே, எப்படியாவது அடுத்த தேர்தலிலாவது வெற்றிபெறவேண்டும் என ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களாகிய நாம் எதிர்பார்த்திருப்போம்.

சிறுகச் சிறுக கட்டிய மதிமுக என்கின்ற தேண்கூட்டை, ஈழத்தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரத்தை எப்படி உங்களால் உடைக்க மனம் வந்தது?

சரி வைகோவுக்காவது இல்லாவிடினும் உங்கள் உடன்பிறப்புக்களாகிய ஈழத்தமிழர்களுக்காயினும் நீங்கள் மீண்டும் மதிமுகவோடு சேர வேண்டும். நடந்தவை நடந்தவையாகட்டும். உங்கள் கால்களைப் பற்றி மன்றாடிக் கேட்டுக்கொள்கின்றோம், மீண்டும் மதிமுகவை நோக்கிச் செல்லுங்கள். ஈழத்தழிரின் விடிவை விரைவாக்க உதவி செய்யுங்கள்.

தங்கள் உண்மையுள்ள
கனடாவில் அகதியாக உள்ள
இளவரசன்
2006-12 – 27

No comments: