பல தடைகளைத் தாண்டி எனது பயணம் தொடர்கிறது. அதிகாலை எழுந்து அவசரத்தில் குளித்து ஆடை அணிந்து வாகனத்தில் போய் புகையிரத்தில் ஏறி பின்னால் நடந்து வேலைக்கு வந்து விருப்பியும் விரும்பாமலும் பலரோடு பலகி வீட்டே வந்த கிடைக்கும் சிறிய நேரத்தில் பிள்ளைகளின் சிரிப்பில் மயங்கி அடுத்தநாளுக்கு "எலாம்" வைத்து வாழ்க்கை சக்கரம் மிண்டும் அதே நாட்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இடையில் உறவுகளுக்கு எதாவது நடந்தால் அதை கவனிக்க நேரம் அற்ற இயந்திர வாழ்ககை இது. இந்த வாழ்க்கையில முதல் துலைந்து போனது மனிதம் தான். பின் எதற்காக இந்த சக்கரம் இன்னும் ஓட வேண்டும். விடை தேடும் போது சிலருக்கு தற்கொலை செய்யும் எண்ணம் கூட வந்து போகிறது.
இயந்திர சக்கரத்தினுள்ளே வாழ்க்கையினை துலைத்தவர்கள் நாம். தடைகள் பல வந்து எம் உரிமைகளை தட்டியெடுக்கின்றன.
சி என்ன வாழ்க்கை இது...
மீண்டும் "நட்பு" என்கின்ற என் குறும்படத்தோடு உங்களை சந்திக்கின்றேன். அது எப்போ என்பது என் பிள்ளைகளின் சமாதானத்தோடுதான்...
Wednesday, May 09, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment