Friday, May 27, 2011

2nd day

took the pills with oatmeal
same weight as first day 84.8kg

went to downtown for charity bike ride and skipped morning coffee, drove by Timmies first time without ordering coffee myself:-)

I couldn't skip lunch so went to Spadina garden, ate with family. was bad idea

came home, took the pills..green salad, almonds, water, apple etc for supper/dinner.

Tuesday, May 22, 2007

கள்ளத்தோணிகள்...

http://www.thestar.com/News/article/216290

முன்ற நாட்கள் விடுமுறை தாண்டி வேலைக்கு வந்து முதல் செய்தியே மனதை வருடத்தொடங்கியது.

எங்கள் சமுகத்தின் சில பிரிவினை சக்திகளை ஊதி பெரிதாக்கி பின் எங்கள் ஒன்று பட்ட பலத்தை சுக்குநூறாக்குவதில் எம் எதிரிகளுக்கு பிடித்த தொழிலாகும்.

இந்த இளைஞர்கள் கனடாவில் பிறந்திருந்தாலும் அவர்களில் பெற்றோர்கள் பல தொழில் பார்த்துதான் இவர்களை வளர்க்கின்றார்கள். அப்படி வளக்கப்படுகிற குழந்தைகளுக்கு நற்குணங்களை சொல்லிக்கொடுக்க மறந்து போன பெற்றோர்கள். பணம் பணம் என அலைந்துதிரியும் மனிதர்கள். மிருகக்குணங்களோடு அவர்கள் பிள்ளைகள் வளக்கப்படுகின்றார்கள். அவர்கள் சொந்த சகோதரர்களையே FOB என கூப்பிடும் கல்நெஞ்சக்காரர்கள். இவர்களை சட்டத்தின் மூலம் தண்டிக்க வேண்டும். அடிப்படை மனித உரிமைகளை மதிக்கும் அமைப்புக்கள் இவர்களை சட்டத்தின் முன்னால் நிறுத்த வேண்டும்.
பெற்றோர்களின் வளப்பு பிழையாகிப்போனதுகளினால் கனடாவில் பிறந்த வலசுகள்..அவ்வளவுதான்.

Wednesday, May 09, 2007

வாழ்க்கைப் பயணம் தொடர்கிறது

பல தடைகளைத் தாண்டி எனது பயணம் தொடர்கிறது. அதிகாலை எழுந்து அவசரத்தில் குளித்து ஆடை அணிந்து வாகனத்தில் போய் புகையிரத்தில் ஏறி பின்னால் நடந்து வேலைக்கு வந்து விருப்பியும் விரும்பாமலும் பலரோடு பலகி வீட்டே வந்த கிடைக்கும் சிறிய நேரத்தில் பிள்ளைகளின் சிரிப்பில் மயங்கி அடுத்தநாளுக்கு "எலாம்" வைத்து வாழ்க்கை சக்கரம் மிண்டும் அதே நாட்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இடையில் உறவுகளுக்கு எதாவது நடந்தால் அதை கவனிக்க நேரம் அற்ற இயந்திர வாழ்ககை இது. இந்த வாழ்க்கையில முதல் துலைந்து போனது மனிதம் தான். பின் எதற்காக இந்த சக்கரம் இன்னும் ஓட வேண்டும். விடை தேடும் போது சிலருக்கு தற்கொலை செய்யும் எண்ணம் கூட வந்து போகிறது.

இயந்திர சக்கரத்தினுள்ளே வாழ்க்கையினை துலைத்தவர்கள் நாம். தடைகள் பல வந்து எம் உரிமைகளை தட்டியெடுக்கின்றன.
சி என்ன வாழ்க்கை இது...

மீண்டும் "நட்பு" என்கின்ற என் குறும்படத்தோடு உங்களை சந்திக்கின்றேன். அது எப்போ என்பது என் பிள்ளைகளின் சமாதானத்தோடுதான்...

Sunday, January 14, 2007

யாழ் பயணம்

என் தேசத்தின்
மேனியில்
என் கால்கள்
மிதிபட்டப்போது

மின்னலடித்து வீரம்
என் உடம்பில்
ஏறிற்று!

யாழ்ப்பாணம்
அதே
இடம்
உடைந்த
வீடுகளுக்கு
சுன்னாம்பு
அடித்து விட்டு
வர்க்க வெறிக்குள்ளே
நீந்தப் பழக்கிக்கொண்டிருக்கும்
நேற்றைய சந்ததிகளின்
எச்சில்கள்

இன்றைய
சந்ததிகளளோ
இடைக்கிடையே
தத்தளிக்கும்
உணர்வுக்காய்
சிங்கள
ஆண்குறியை
விரும்புகின்றனர்!

வந்தவன் ஏதோ
சலுகையை
தந்தான்
ஆனால் எங்கள்
பெண்களுக்கோ
அவைதான்
உரிமைகளாய்
தெரிகிறது அங்கே!
சி வேண்டாம்
எழுதவே கூசுகிறது!
தேசத்தின் ஆன்மாவை
திரையில் இடுவதற்குப்
பதிலாய்
சில விவச்சாரிகளை
அம்மனப்படுத்வதில்
பயனில்லை எனக்கு!!

Thursday, December 28, 2006

கனடா அகதியின் அன்பு வேண்டுதல்…

கனடா அகதியின் அன்பு வேண்டுதல்…

அன்பான செஞ்சியாருக்கும், எல்.ஜிக்கும்
ஈழத்தமிழனாகிய நான் கனடாவில் குடியேறி பல வருடங்கள் ஆகினும் தங்களைப் போல் தமிழ் நாட்டில் இருந்து குரல் கொடுத்து வந்த தலைவர்களைப் பார்த்து தான் என் தாயகத்தின் பால் அன்புகொண்டேன். எத்தனையோ ஈழத்தமிழர்கள் வைகோவின் கட்சி கண்; படாமல் கரைசேரவேண்டும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த போது, தங்கள் இருவர்களின் கட்சி தாவல் ஈழத்தமிழர்களாகிய எங்கள் எல்லோரையும் கவலையில் தள்ளியுள்ளது.

தங்களின் தலைமையினை எதிர்த்து நீங்கள் அறிக்கை கொடுத்தது பாரதூரமான குற்றமாகும்;. எங்கள் விருப்பம் எல்லாம் நீங்கள் இருவரும் வைகோவின் காலில் விழுந்து உடனடியாக மன்னிப்புக்கேட்டு, திரும்பவும் கட்சியில் சேரவேண்டும். ஓவ்வொரு முறையும் மதிமுக தோல்வியினை சந்திக்கிறபோது ஈழத்தமிழர்களின் இதயங்களில் இரத்தம் சிந்தும். அவர்கள் தோற்றுவிட்டார்களே, எப்படியாவது அடுத்த தேர்தலிலாவது வெற்றிபெறவேண்டும் என ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களாகிய நாம் எதிர்பார்த்திருப்போம்.

சிறுகச் சிறுக கட்டிய மதிமுக என்கின்ற தேண்கூட்டை, ஈழத்தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரத்தை எப்படி உங்களால் உடைக்க மனம் வந்தது?

சரி வைகோவுக்காவது இல்லாவிடினும் உங்கள் உடன்பிறப்புக்களாகிய ஈழத்தமிழர்களுக்காயினும் நீங்கள் மீண்டும் மதிமுகவோடு சேர வேண்டும். நடந்தவை நடந்தவையாகட்டும். உங்கள் கால்களைப் பற்றி மன்றாடிக் கேட்டுக்கொள்கின்றோம், மீண்டும் மதிமுகவை நோக்கிச் செல்லுங்கள். ஈழத்தழிரின் விடிவை விரைவாக்க உதவி செய்யுங்கள்.

தங்கள் உண்மையுள்ள
கனடாவில் அகதியாக உள்ள
இளவரசன்
2006-12 – 27

Wednesday, December 13, 2006

வலி

அம்மா
ஏன் அம்மா என்னை
விட தம்பியிடம் பாசம் கூட
கேட்ட எனக்கு

இப்ப என் இரண்டாவது
பிள்ளை
அவன் கேட்டால்
எப்படியிருக்கும்
எனக்கு?

வலி
தனக்கு வந்தாலே தெரியும்

Monday, December 11, 2006

முடியும் என்கிற போதே முடித்துக்கொள்ளுங்கள்

அற்ப ஆசையின்
அடுத்த வீட்டின்
கோபுரத்தின் உயரத்தாலும்
கதைவிடும் நண்பர்களின்
இம்சைக்கும்
ஈடுகொடுக்கு
கடன்வாங்கி
வீடு வாங்கும் தமிழினமே

தூக்குப்பொட்டுச்
சாகும்
எம்மினத்தின்
உள்ளாந்த உண்மை
ஏது தெரியுமோ?

பிறருக்காக இன்றி
நமக்காகவே வாழ்வோம்..
கைக்கு அடக்கமாகவே
கடன் வாங்குவோம்.

Saturday, October 14, 2006

Digital Photos - my SLR camera


Tamil’s future on IC’s hand – You can let us go free or squeeze us to death


International Community, Please don't destroy US

Singhalese boy dressed up to go school
Tamil boys don’t have school to go to
Of course Tamil’s Homeland

Tamil's homeland - Of course -
Tamils’ surviving place
Globalization in Srilanka

Singhalese’s Homeland

Tuesday, October 10, 2006

நட்பு

வெளிநாட்டில் நட்பின் இலக்கணத்தை மாற்றிய எங்கட ஆக்களின் பதிவு.

இந்த குறும்படம் வருகின்ற மாதத்தில் படமாக்கின்றேன்.

Monday, October 09, 2006

ஒரு வெறி

எதையாவது சாதிச்சம் என்று வெறி கொள்ளத்தான் எங்களை போன்றோர் இப்படியான படங்களை எடுக்கின்றோம். நாம் மணிரத்தினம் ஆகிவிட ஆசை கொள்ளவில்லை. "என்ன மணிரத்தினம் என்ற நினைப்போ" என்று எல்லி நகையாடும் உற்ற நண்பர்களின் சொற்களையும் தாண்டி எம் உள்ளத்தில் உறங்கும் சமுதாய சீர்கேடுகளை, ஒட்டைகளை உடைத்தெறிவதற்கு முயற்சி எடுக்கின்றோம்.


படம் எடுக்கத்தெறிந்தவனுக்கு சமுதாயத்தில் அக்கரையில்லை. சமுதாயத்தில் அக்கரை உள்ளவனுக்கு படம் சரியாக எடுக்கத்தெரியாது.
இந்த படம் எடுத்து தான் எங்கட வீட்டு அரிசி பானை epwg;g வேண்டும் என்று எமக்கில்லை.

மற்றவனை பாராட்டம் பழக்கம் இல்லாவிடினும் நக்கல் கதைகளையும் குத்தல் குதங்கங்களைம் உங்கள் மனங்களில் விட்டு வையுங்கள்.

நன்றி.

Sunday, October 08, 2006

காட்டிக்கொடு

Hero is now ZERO!!! Actor Suria

நடிகன் சுூரியா திருமணம் ஆனதும் தனது மனைவியை நடிக்க விடமாட்டாராம்?
யார் இவர் ஒரு மனிதத்தின் ஆளுமையை தடை செய்ய? தான் நடிக்கலாம் மனைவி கூடாது. தமிழ் ஆண்களின் வழமையான எதிர்பாப்பு.. சிவகுமாரின் மகனுக்கு அது என்ன விதி விலக்கா?
இந்தப் படம் அதைப் பற்றியது. பெண் அடிமைத்துவத்தை எதிர்க்கும் சக்தி என்னிடம் இல்லை. எதோ என்னால் முடிந்தது.

என் ஆண்மாவை நேசிக்கும் என் மனைவிக்கு இந்த குறுந்திரைப்படம் சமர்ப்பணம்.

Real Media - low quality - fast
http://www.edigitallab.com/kaddikodu.rmvb

Windows Media - High Quality - GOOD
http://www.edigitallab.com/kodufinal.wmv



http://edigitallab.com/v-web/vzpoll/poll.php

ஆரம்பம்

எனது முதல் முயற்சி. கனடாவில் எங்கட பெயரை மக்கர் பண்ணிகொண்டிருக்கும் பொடியள்களுக்கு பின்னால..உள்ள உண்மையான காரணம் - பெண்ணை மகிழ்விக்க.

http://edigitallab.com/movie.wma